நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடிதம்
தமிழோவியம்
கடிதம் : நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடிதம்
- நாகூர் ரூமி
அன்பான தமிழோவியம் வாசகர்களுக்கு என் வணக்கம்.
கடந்த ஒன்பது வாரங்களாக தமிழோவியத்தில் நல்லடியார் என்ற நண்பர் வஹீ பற்றி எழுதிவந்திருக்கிறார். நேசகுமாரின் (மொழிபெயர்ப்புக்) கட்டுரைக்கு பதில் கொடுக்கும் முகமாக.
அதில் வந்த கட்டுரையைவிட பல மடங்கு பெரிய மறுமொழிகளையும் நான் படித்தேன். அதில் பல இடங்களில் நேசகுமார், மனிதன், மதுரவேல், நல்லடியார், சோலை, பகுத்தறிவுவாதி போன்ற சிலர் என் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் நான் இந்துக்கடவுள்களைக் கிண்டல் செய்து எழுதியிருந்ததாகவும் நேசகுமாருக்கும் எனக்கும் சொந்தப்பகை இருப்பதாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.
இதுநாள்வரை நான் எதற்கும் பதில் சொல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று
மதங்களைப் பற்றிய எந்த விவாதமும் புரிந்துகொள்ளும் நோக்கோடு செய்யப்பட்டால் சரி. ஆனால் ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளே தவறு என்று சொல்வதற்காக வாதிட்டுக்கொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. எனவே, முடிவற்ற ஒரு காலவிரய வேலையில் என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய நம்பிக்கை தவறு என்று நீங்கள் வாதிடுவதனால் எனக்கும் நன்மையில்லை, உங்களுக்கும் நன்மையில்லை.
இரண்டு
என் எழுத்துப்பணிகள் காரணமாக என்னால் விவரமான பதில்களை உடனுக்குடன் கொடுத்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.
நேசகுமார் பற்றி
எனக்கும் நேசகுமாருக்கும் எந்தப் பகையும் கிடையாது. அவர் யாரென்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் அவர் எனது 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' நூலைப்படித்து விட்டு எழுதிய விமர்சனம் அவரைப் புரிந்துகொள்ள உதவியது.
அவருடைய நோக்கம் இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டும், முஹம்மது நபியின் ஒழுக்கத்தைக் குறைசொல்ல வேண்டும் என்ற ரீதியில் தொடர்ந்து இருக்கிறது. ஊர் பேர் தெரியாத எல்ஸ்ட் என்பவனின் கட்டுரையைத் தேடிப்பிடித்து அவர் அவசரமாக தமிழாக்கியதிலிருந்தே இது தெரிகிறது.
இது காலம் காலமாக இஸ்லாத்தை வெறுத்த மேற்கத்தியர்கள் செய்த வேலைதான். டிஷ்னரி ·ப் இஸ்லாம் எழுதிய தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் என்ற பாதிரியைப் போல. அற்புதமான உழைப்பில் உருவான அந்த நூலில் ஆங்காங்கு அவர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் நஞ்சு தடவி வைத்திருப்பார். கவனமாகப் படிப்பவர் யாரும் இதைப்புரிந்துகொள்ள முடியும்.
நேசகுமார் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் எனது நூலிலேயே பதில் இருக்கிறது. ஆனால் அவருக்கு அதெல்லாம் போதவில்லை. அல்லது தவறாகப்படுகிறது. அவர் நினைப்பதை நான் சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எந்த பதிலாலும் அவரைத் திருப்திப்படுத்த முடியாது.
அவருடைய கேள்விகளுக்கு ஏன் நான் மௌனம் சாதிக்கிறேன் என்று பல நண்பர்கள் பலமுறை என்னைக் கேட்டிருக்கிறார்கள். வெள்ளையைக் கறுப்பென்று சாதிக்கும் ஒருவர் குருடராக இருக்க வேண்டும் அல்லது பார்வைக் கோளாறு உள்ளவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவருக்கு நான் என்ன பதில் சொல்ல? இம்மையில் குருடர்களாக இருப்பவர்கள் மறுமையிலும் குருடர்களாகவே இருப்பார்கள் என்று திருக்குர்ன் கூறுவது ஞாபகம் வருகிறது.
என்னுடய விமர்சனக் கட்டுரைகளின் நேர்மையைக்கூட அவர் சந்தேகித்து அதற்கு சாமர்த்தியம் என்ற பெயர் கொடுக்கிறார். கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து நான் கற்காலம் என்ற தலைப்பில் என் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். அதுகூட மறைமுகமாக இஸ்லாத்துக்கு வக்காலத்து வாங்கும் செயல் என்று அவர் சொல்கிறார்.
நான் இப்போது சொல்கிறேன். மறைமுகமாகச் செய்யவேண்டிய அவசியம் எனக்கு ஏதுமில்லை. நான் வெளிப்படையாகவே செய்கிறேன். நான் மதத்தால் ஒரு முஸ்லிம். திருக்குர்ன் என்பது இறைவனுடைய செய்தி என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதில் தவறிருக்க முடியாது என்று நான் திடமாக அறிகிறேன்.
இறைச்செய்தியின் தன்மை
இறைவனின் செய்தி என்பது மொழிதாண்டிய ஒரு விஷயம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதனால்தான் சில நேரங்களில் வஹீ தனக்கு தேனீக்களின் ரீங்காரம் போலவும் மணியோசை போலவும் வந்ததாக நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.
தேனீக்களின் ரீங்காரமும் மணியோசையும் அரபி மொழியில் இருக்காது என்பது தெளிவு. அப்படியானால்? மிகத்தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது. நபிகள் நாயகம் பேசிய, அவர்களுக்குத் தெரிந்த ஒரேமொழி அரபி மொழிதான். எனக்கு இறைச்செய்தி வந்தால் அதை நான் தமிழில்தானே புரிந்துகொள்ள முடியும்? அதேபோல அவர்கள் அவர்களுடைய மொழியில் அதை உள்வாங்கிக்கொண்டார்கள்.
இதுதான் ஹதீதுகளின் உட்குறிப்பு.
இந்த அடிப்படையில்தான் நான் திருக்குர்னின் வசனங்களைப் புரிந்துகொள்கிறேன். விபச்சாரம் புரிந்தததாக நிரூபிக்கப்படும் பெண்ணுக்கும் ஆணுக்கும் கசையடி கொடுங்கள் என்று சொல்லும் வசனத்தை, குற்றவாளிகளை தண்டியுங்கள் என்று இறைவன் சொல்வதாகத்தான் நான் அர்த்தப்படுத்துகிறேன். ஏனெனில் காவல் நிலையமோ, சிறைகளோ, லத்திகளோ, துப்பாக்கிகளோ, நீதிமன்றங்களோ இல்லாத ஒரு காலம் அது. சாட்டையும், அம்பும், வாளும், தோளும் கொண்டு மனிதர்கள் வாழ்ந்த காலம். எனவே இன்றைய காலகட்டத்தில் 'அடல்ட்ரி' செய்த ஒருவருக்கு இன்றைய சட்டங்களின்படிதான் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது என்னுடைய விளக்கம் அல்லது புரிந்துகொள்ளல். இதை ஒத்துக்கொள்ளாத முஸ்லிம் அறிஞர்கள் இருக்கலாம்.
இன்றைக்கு பள்ளிவாசல்களில் மொசைக் தரை அல்லது மார்பிள் தரை போடப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. குளிர்பதனம் செய்யப்படுகிறது. மின்விசிறிகள் சுழல்கின்றன. குழல் விளக்குகள் எரிகின்றன. நபிகள் நாயகத்தின் காலத்தில் இருந்த மாதிரியா வெறும் பாலவனக் களிமண்ணில் இருக்கின்றன? நபிகள் நாயகம் காய்ந்த ரொட்டியையும் பேரீச்சம் பழங்களையும்தான் பெரும்பாலும் சாப்பிட்டார்கள். நாம் அப்படியா சாப்பிடுகிறோம்? சிக்கன் 65, பிரியாணி என்று வெளுத்துக் கட்டவில்லையா? கல்லாலடித்துக் கொல்லும் கொடூர தண்டனை கொடுக்கும் நீதிபதிக்கும் இது பொருந்தும்.
மற்ற எல்லா வகைகளிலும் 21-ம் நூற்றாண்டை ஏற்றுக்கொண்ட நாம் தண்டனை கொடுப்பதில் மட்டும் ஏன் 1425 ண்டுகளுக்கு முந்திப் போகவேண்டும்? இதுதான் என் கட்டுரையின் பிரதான கேள்வி.
கூடாஒழுக்கத்தில் ஒரு குரங்கு ஈடுபட்டிருந்ததாகச் சொல்லும் ஹதீது ஒன்றைக் குறிப்பிட்டு அந்த ஹதீதைச் சொல்பவரும் ஒரு குரங்காகத்தான் இருப்பார் என்றுகூட அந்தக் கட்டுரையில் நான் மறைமுகமாகக் கிண்டல் செய்திருக்கிறேன். ஹா, ஹதீதில் குறிப்பிடப்படும் ஒருவரை எப்படி நாகூர் ரூமி அப்படிச் சொல்லலாம் என்று உடனே எனக்கு எதிராக ‘·பத்வா’க்கள் வழங்கினால் என்னர்த்தம்? யாரையும் கேவலமாகப் பேசுவதோ குரங்கென்று சொல்வதோ எனது நோக்கமல்ல. அப்படி ஒரு ஹதீது இருக்க சாத்தியமில்லை என்ற கருத்தைத்தான் நான் அப்படி உணர்த்த முயன்றிருக்கிறேன். எந்த முஸ்லிம் பத்திரிக்கையும் அதை வெளியிட முன்வாரத நிலையில்தான் எனது தளத்தில் அதை வெளியிட்டேன். (இந்துக்கடவுள்களை நான் கிண்டல் செய்தேன் என்ற கற்பனையான குற்றச்சாட்டும் இந்த வகையைச் சேர்ந்தததுதான்). என்னுடைய நேர்மையை சாமர்த்தியம் என்கிறார் நேசகுமார்!
நேசகுமாரின் எழுத்தின் தன்மை
முதலில் நேசகுமார் இஸ்லாம் பற்றி ஒரு விவாதத்தைத் துவக்கியிருக்கவே தேவையில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு நிச்சயமாகக் கிடையாது. காரணம், திருக்குர்னும் ஹதீதும் மூலமொழியாகிய அரபியில் இருக்கின்றன. எந்த மொழியில் நாம் மொழிபெயர்த்துப் படித்தாலும் அது நம்முடைய புரிந்துகொள்ளலாகவே இருக்கும். எனவே எந்தவொரு மொழிபெயர்ப்பையும் வைத்து ஒரு வசனம் அல்லது ஹதீதின் அர்த்தம் இதுதான் என்று நாம் அடித்துக்கூற முடியாது. இது ஒருவிஷயம்.
அடுத்தது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் தொடர்பானது. இது முஸ்லிம்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம்.
திருக்குர்ன் இறைவனின் வேதம் என்றோ நபிகள் நாயகம் இறுதித் தூதர் என்றோ ஒரு முஸ்லிம் நம்புவதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை? அப்படியெல்லாம் கிடையாது என்று ஏன் ஒருவர் மறுக்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன ஏற்பட்டது? நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லையே!
சமஸ்கிருதம் தெரியாத நான், கீதையின் சில வசனங்களை மொழிபெயர்ப்பில் எடுத்து வைத்துகொண்டு, பகவத் கீதையின்படி ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு ஸ்த்ரீ லோலர் என்று கீதையை 'விளக்க' ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். விஷய ஞானமுள்ள அறிஞர்கள் சிலர், அதை அப்படிப் பார்க்கக் கூடாது என்று எனக்கு விளக்குவதாக வைத்துக்கொள்வோம். அதையும் மீறி, நான் 'இல்லை, இப்படித்தான்' என்று 'ஆதாரங்கள்' காட்டிக்கொண்டிருந்தால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
திருக்குர்னின் வசனங்களுக்கு ‘விளக்கம்’ சொல்ல வரும் நேசகுமாரின் கதையும் இதேதான். ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பதன் அர்த்தத்தை அவர் புரியவைத்துக் கொண்டிருக்கிறார்! இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை.
நாகூர் ரூமி இந்துக்கடவுள்களைப் பற்றி கிண்டலாக எழுதிவிட்டார் என்றுதான் வெறுப்பிலும் காழ்ப்புணர்ச்சியிலும் நேசகுமார் இஸ்லாத்தைப் பற்றி இப்படி எழுதிக்கொண்டிருக்கிறார் என்றால் எங்கேபோய்ச் சிரிப்பது?
முதலில், நான் இந்துக்கடவுள்களைப் பற்றி எங்கே கிண்டலாக எழுதியிருக்கிறேன் என்று சுட்டிக்காட்டுங்கள். என் நடை கிண்டலானதுதான். நான் எதை எழுதினாலுமே. (தவறான ஹதீது ஒன்றின் அறிவிப்பாளரைக் குரங்கென்று கிண்டல் செய்த உதாரணத்தை இங்கே இணைத்துப் பார்க்கவும்). ஆனால் இந்துக் கடவுள்களை கிண்டல் செய்து எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் எழுதியிருந்தால், அதை எனக்கு நாகரீகமாக யாராவது சுட்டிக்காட்டியிருந்தால், அதில் உண்மையிருந்தால், நான் நிச்சயமாக என் கருத்தை மாற்றிக்கொண்டிருந்திருப்பேன். ஆனால் ஒரு கற்பனையான குற்றச்சாட்டுக்காக, இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் அவதூறு செய்வேன் என்று ஒருவர் சொல்வது அபத்தமானதல்லவா?
எழுத்தும் நட்பும்
ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் நண்பர்களாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். மனிதாபிமானம், அன்பு, நட்பு இதெல்லாம் மதம் பார்த்து வருவதில்லை. மனிதம் பார்த்து வருவது. ஆனால் இரண்டு மதங்களின் அடிப்படை நம்பிக்கைகள் வெவ்வேறாக இருக்கும்போது, ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கையே தவறு என்று வாதிடுவதால் நிச்சயமாக நட்பு மலராது. நட்பு மலரவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
தமிழோவியத்திலேயே நான் எழுதிய 'நிலவைச் சுட்டும் விரல்' என்ற தீபாவளி பற்றிய கட்டுரையையோ ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய 'இறக்கும் கலை' என்ற கட்டுரையையோ, எனது தளத்தில் நான் எழுதியுள்ள ரமணர், பகவத்கீதை பற்றிய கட்டுரைகளையோ, திசைகளில் நான் எழுதிய ஓஷோ பற்றிய 'நூறாவது டிகிரி' என்ற கட்டுரையையோ படித்துப் பாருங்கள். என் மனது உங்களுக்குப் புரியலாம்.
எழுத்தின் அடிநாதமாக உள்ள spirit-ஐப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். புண்படுத்துவது எப்போதுமே என் நோக்கமல்ல. ஆனால் உயிரைவிட நாங்கள் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தையோ அவர்களின் மனைவிமார்களான அன்னையர்களையோ ஒருவர் கேவலமாகப் பேசினால் எந்த ஒரு உண்மையான முஸ்லிமுக்கும் கோபம் வரத்தான் செய்யும். அத்தகைய கேவலமான காரியத்தை திரும்பத் திரும்ப ஏன் செய்ய வேண்டும்? உங்களுடைய தாயையோ சகோதரியையோ பற்றி ஒருவர் கேவலமாக எழுதினால் இப்படி பொறுமையாக விவாதித்துக்கொண்டிருப்பீர்களா?
என்னுடைய இஸ்லாம் பற்றிய நூல் ஒரு அறிமுக நூல்தான். அது ஒரு விமர்சன நூல் அல்ல. என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் அமைதியைப் போதிக்கின்ற மார்க்கம். அதற்கான கூறுகளைத்தான் இஸ்லாமிய வரலாற்றிலும் நபிகள் நாயகத்தின் வாழ்விலும் பார்க்க முடியும். முஸ்லிம்கள் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுவார்களேயானால் திருக்குர்னும் நபிகள் நாயக வழிகாட்டுதலும் அதற்கு எதிரானதாகவே இருக்கின்றன என்பதுதான் என்னுடைய புரிந்துகொள்ளல். மற்ற எல்லா வகையான வன்முறை விளக்கங்களும் தவறானவை என்பதே என் கருத்து.
என் கருத்து எனக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு. நட்புடன் இருக்கத்தான் எழுத்தும் பேச்சும் மூச்சும் எல்லாமே. அதற்கான வேலைகளைச் செய்யலாமே!
எனவே மீண்டும் ஒரு விவாதத்தைத் துவக்குவதற்கான கட்டுரை அல்ல இது. எல்லா விவாதங்களையும் முடிப்பதற்கான ஒரு வேண்டுகோள். நேசகுமார் இதற்கும் ஒரு நூறு பக்கத்துக்கு பதில் எழுதினாலோ அல்லது வேறு யாரும் மறுப்பு எழுதினாலோ நான் பதில் சொல்லப்போவதில்லை. விருப்பு வெறுப்பின்றி நான் சொல்வதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அவ்வளவுதான்.
இந்தக் கடிதத்துக்கு வரும் நியாயமான பதில்களை மட்டும் அனுமதிக்கும்படியும், விவாதத்தைத் தூண்டும் விதமாகவும், நாகரீகமற்ற மொழியில் வரும் மறுமொழிகளையும் அனுமதிக்க வேண்டாமென நண்பர் கணேஷ் சந்திராவையும் நான் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
கூடிய விரைவில் சூ·பித்துவம் பற்றிய ஒரு தடித்த புத்தகத்துடனும், ஹோமரின் காவியமான இலியட்-டின் தமிழாக்கத்துடனும் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
நாகூர் ரூமி
இது தொடர்பாக தனிப்பட்ட கேள்விகள் இருப்போர் ruminagore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
Copyright © 2005 Tamiloviam.com - Authors
திண்ணையில்...
கடிதம் பிப்ரவரி 11 ,2005 - சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன் (3/11/05)
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சின்னக் கருப்பன் அவர்களுக்கு வணக்கம் தங்களது சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் குறித்த கட்டுரை மிக கருத்தாழமிக்க ஒன்று. இன்றைய காலக் கட்டத்துக்கு மிக அவசியமான ஒரு பொருட்படுத்துதல் உங்கள் கட்டுரை. தேசத் துரோகிகளுக்கும்,
கடிதம் ஜனவரி 13,2005 (1/13/05)
ஆசிரியருக்கு, உங்கள் இணையதளத்தில் இஸ்லாம் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. திரு.நேசகுமார் நன்றாக ஒரு வாதத்தைத் தொடங்கியுள்ளார். எனது மார்க்க சகோதரர்கள் வசைபாடாது அவரை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் unfortunately ஒருவர் இஸ்லாம் விலக்கக்
கடிதம் 23, 2004 - நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க! (12/23/04)
இஸ்லாத்தில் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும் என்ற கட்டுரையில் [1] பர்தா கடமையாக்கப்பட்டதன் பிண்ணனியை விளக்க முயன்ற நேசகுமார் முஹம்மது நபியவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையை குறிப்பிட்டுள்ளார். நபியவர்கள் ஒருநாள் ஜைனப
கடிதம் டிசம்பர் 23, 2004 (12/23/04)
நேசக்குமாரின் குறிப்புகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட தொனி இவ்வாரக் கட்டுரையில் உள்ளது.ஆகவே இதை எழுதுகிறேன். 1. முகமது அவர்களின் வாழ்க்கையே முஸ்லீம்கள் மட்டுமல்லாது மானுட குலம் அனைத்தும் பின்பற்றவேண்டிய உன்னத உதாரணம் என்று நாகூர் ரூமி போன்ற அடிபப்டைவாதிகள் வாதி
திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து (5/11/06)
யூனிகோடுக்கு மாறியமைக்கு வாழ்த்துக்கள். எவ்வளவோ அரிய, பலருக்கும் தெரியாத கருத்துக்கள், விவாதங்கள் திண்ணையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன. இந்நிலையில் யூனிகோடுக்கு மாறியதன் மூலம் திண்ணை படைப்புகளில் தேடும் பணியை யாரும் எளிதாய்ச் செய்ய முடியும். மிகவும் சந்தோஷத்தைத் தருகிறது இந்த மாற்றம்.
நேசகுமார்களுக்கு நேசமுடன் (10/28/04)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதித் தூதர் என்பது முஸ்லிம்கள் அடிப்படையான நம்பிக்கை. அப்படி ஒரு விஷயமே திருக்குர்ஆனில் இல்லை என்றும், 'இந்த வாசகம் திருக்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் இடம் பெறவில்லை என்பதை வசதியாக (நாகூர் ரூமி) மறைத்து விடுகிறார் ' என்றும் திரு.நேசகுமா
நபிகள் நாயகம் - ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள் (1/27/05)
சென்ற வார திண்ணை இதழில் [1] , சலாஹுதீன் என்பவர் நான் , நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட்டிருந்தது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில், நான் குறிப்பிட்டிருந்ததற்கு ஆதாரம் கேட்டிருந்தார். மேலும் ஹதீஸுகள் என்றால்
கடிதம் (8/31/06)
இந்தியாவில் இஸ்லாமியரின் தீவிரவாதத்தை விடவும் அதிகமாக சுமார் 150 மாவட்டங்களில் கோலோச்சுகிற நக்ஸல் தீவிரவாதம் குறித்து இவர் என்ன சொல்வார்?
நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்! (12/23/04)
பர்தாவைப்பற்றிய திருக்குர்ஆன் வசனங்களுக்கும் அன்னை ஜைனப் அவர்களை நபிகளார் திருமணம் முடித்ததற்கும் சரித்திரத்தொடர்பு இருப்பதால், பர்தா என்பதே நபிகளாரின் மனைவிமார்களுக்கும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே கடைமையாக்கப்பட்டது என
ஹதீஸ் - ஒரு சிறு விளக்கம்! (1/20/05)
நபிகள் நாயகம் அவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்ட போது அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வை ஆதாரமாக நேசகுமார் காட்டி இருந்தது உண்மைதான். அவர் ஆதாரம் தரவில்லை என்று சொன்னது என் தவறு.
கடிதம் நவம்பர் 18,2004 - நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி (11/18/04)
==== ‘ஹாத்தமன் நபி’ என்ற அரபிப்பதத்திற்கு பொருள் ‘இறுதி நபி’ என்பது சரியா ? என்ற கேள்விக்கு விடை காண நேசகுமார் மேற்கொண்ட முயற்சிகள், குர்ஆனின் வசனத்திற்கு விளக்கம் அறிய முயலும் ஒரு முஸ்லிமல்லாதவரின் முயற்சிகள் என்ற கண்ணோட்டத்தில் ஆச்சரியத
கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் 'எண்ணச்சிதறல்கள்' பற்றி..... (8/10/06)
ஆபிதின், நாகூர் ரூமி, சாருநிவேதிதாவின் முன்னாள் மனைவியான அமரந்தா போன்றோரெல்லாம் இதுவரையில் ஆதாரங்களுடன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரையில் சாருநிவேதிதா தன் பக்கத்தில் நியாயமிருந்தால் ஏன் பதிலளிக்கவில்லை. அத்தகையதொரு பதில் வரும்வரையில் இந்தப் பிரச்சினையும் அவ்வப்போது தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
கடிதம் நவம்பர் 25,2004 (11/25/04)
சென்ற சில வாரங்களாக திரு.நேசகுமார், ரூமியின் புத்தகத்தை விமர்சித்தும், இஸ்லாம் குறித்தான உண்மையான தகவல்களையும் பற்றி எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். அதே புத்தகம் குறித்தான திரு.சூர்யா எழுதிய விமர்சனத்தையும் படித்தேன். முதலில், நேச குமாருக்கும், சூர்யா இருவரு
கடிதம் நவம்பர் 18,2004 - நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா (11/18/04)
==== பர்தா பற்றிய விளக்கத்திற்கு போகுமுன் நேசகுமாரின் கவனத்திற்கு சில விஷயங்களை வைக்க விரும்புகிறேன். நாகூர்ரூமியின் 'இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் ' என்ற நூலில் அவர் 'முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித்தூதர் ' என்று குறிப்பிட்டதற்காக, அதற்கான
அட்லாண்டிக்குக்கு அப்பால் (8/3/06)
சிவகுமார் மூக்கு சிவந்து உதடு துடிப்பது, ஜெயகாந்தன், நேசகுமார் இருவர் பற்றித்தான்.
இணையமில்லா இடைவெளியில் - புஸ்பராஜா, ம்!, புத்தவேடு விகாரம், மும்பாய், ·பனா. (7/13/06)
இணையமில்லா இடைவெளியில் இனிய நிகழ்வுகள் பல நடந்தன. புத்தகங்கள், சினிமா, ஊர் சுற்றல், பிள்ளைகளுக்கு பாடம், இசை கேட்டல் ஆகியன இனிதே நிகழ்ந்தேறின.
எரிகிறதாம் அங்கு. ஈரமில்லை இங்கு.எம்மவர்க்கே அழுதழுது இதய ரத்தம் தீர்ந்து போச்சு. (8/17/06)
இஸ்லாமிய அடிப்படைவாத அரசுகளால் 'எதிரி சொத்து' என அறிவிக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்ட ஏழை இந்துக்களின் விவசாய நிலங்களைப் போலவா 'பாலஸ்தீனிய' நிலம் யூதர்களால் வாங்கப்பட்டது? ஏக்கருக்கு 1000 அமெரிக்க டாலர்களை யூதர்களிடம் வாங்கிவிட்டு யூதர்களுக்கு நிலத்தை விற்றவர்கள்தாம் 'பாலஸ்தீனிய அகதிகள்' ..
எண்ணங்கள் - இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம் (8/24/06)
ஜிகாதி தீவிரவாதப் போக்குகளைக் கட்டுப் படுத்துவதில் முஸ்லீம் பெண்கள் மிக முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்மைக்கே உரிய இயல்பான குணங்களான அன்பு, பொறுமை, கருணை போன்ற மனிதப் பண்புகளும், ஆண்களுக்கே உரித்தான குழு சார்ந்த வெறித்தனம் இல்லாமலிருப்பதும், மதவெறியினால் பாதிக்கப் படாத சுய சிந்தனையை பெண்களிடத்தில் இயல்பாக வளரத் துணைபுரியும்.
உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும் (8/3/06)
பாரத, இந்து, தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மீது பாரத முஸ்லீம்கள் பெருமிதம் கொள்கிறார்களா? இல்லை அதுவும் 'இஸ்லாமிற்கு எதிரானதா' - ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் போன்று திருக்குறளும், ராமாயணமும் ஜிகாதி கண்ணோட்டத்தின்படி அழித்தொழிக்கப் பட வேண்டியவையா?
பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத் (8/31/06)
இஸ்லாமிய இறையியலில் இருக்கும் யூத வெறுப்பியல் அதற்கான சமுதாய-பொருளாதார-இனவாத காரணிகள் ஆகியவையும் விவாதிக்கப்பட வேண்டும்.
அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும் (1/20/05)
சார்லஸ் டார்வினுக்கு முன்னதாக பெரும் ஏற்புடையதாக விளங்கிய பரிணாம வாதம் லமார்க் எனும் பிரெஞ்சு நாட்டு உயிரியலாளருடையதாகும். லமார்க்கின் பரிணாம சித்தாந்தத்தின் படி ஒரு உயிரினத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம், உதாரணமாக, ஒட்டகசிவிங்கியின் கழுத்து, அதன் பயன்பாட்டின
எண்ணச் சிதறல்கள் - நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல்.. (8/24/06)
தைரியமுள்ள பெண்மணி என்றவுடன் எனக்கு, சுரையாவாக மதம்மாறி பின்பு ஒரு இஸ்லாமியனின் காதல்வார்த்தைகளால் ஏமாறினேன் என்று இஸ்லாத்துக்கு எதிராக கருதக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு தாம் பழையபடி மாதவிக்குட்டியாகவே ஆகிவிட்டேன் என்று அறிவித்த கமலாதாஸ் நினைவுக்கு வந்தார்.அவர் தாம் மாதவிக்குட்டி என்பதை நிரூபிக்க நினைத்தாரோ என்னவோ, தஸ்லிமா நஸ்ரீனை தலையில் போட்டிருந்த வெள்ளை தலையங்கியுடன் தம்வீட்டில் வரவேற்றிருந்தார் - அதை பத்திரிகைகள் புகைப்படம் சொல்லும் செய்தியாக பிரசுரித்திருந்தன.
மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி (8/31/06)
"முஸ்லீமின் உணர்வுகள் என்றைக்கும் அவனது மார்க்கத்தவருடனேயே இருக்கும். இஸ்லாமினை ஏற்பதன் மூலம் ஒருவன் இனமோ தேசமோ என்றைக்கும் கட்டாயமாக ஒரு குறுகிய தேசப்பற்றில் ஆழ்ந்து போவதில்லை. நிலவரையறைச் சார்ந்த தேசப்பற்றென்பது மானுட சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு மததிற்கு கிடையாது."
தமிழ் சிஃபியில் தொடர் கட்டுரைகள்:
• ஆலய அர்ச்சகராகத் தýத் பெண்சமீபத்தில் கல்கியைப் புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு தகவல் அகப்பட்டது. அங்கயற்கண்ணி என்கிற தýத் சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணொருவர் கோவில் ஓதுவாராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி அது. பெண், அதுவும் தýத் சமுதாயத்தைச் சார்ந்தவர் ஓதுவாராக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதைப் பற்றிய கட்டுரை அது.
• இட ஒதுக்கீடு þ தொடர்ந்து சில சிந்தனைகள்
குடும்பத் தலைவனாக, நண்பனாக, நிர்வாகியாக, மகனாக, சகோதரனாகப் பல வடிவங்களை, இருக்கிற 24 மணி நேரங்களில் எடுத்து, பின் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் இருப்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.
•
மும்பை குண்டு வெடிப்புகள் þ சில சிந்தனைகள், சில கேள்விகள், சில விவாதங்கள்
இதை யார் செய்திருக்கக் கூடும்? þ செய்தியைக் கண்டவுடன் எந்தச் சந்தேகமும் இல்லை எனக்கு. ஒரே நாளில் தொலைவில் இருக்கும் ஸ்ரீநகரிலும் மும்பையிலும் ஒரே மாதிரியான குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாதத்தை அடக்குவதில் பல பத்தாண்டுகள் அனுபவம் வாய்ந்த கில், இந்தக் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வெடிமருந்து சாதாரண ஆர்.டி.எக்ûஸவிட உயர் சக்தி வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார்.
•
பாகிஸ்தானில் இந்துக் கோவில் புனரமைப்புபாகிஸ்தானின் சக்வால் மாவட்டத்தில் உள்ள கடாஸ் ராஜ் கோவில் குழுமத்தைப் புனரமைக்கப் போவதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மகாபாரதக் கதையோடு சம்பந்தப்பட்ட இந்த இடத்தில், மனித நாகரிகத்தின் அளவுக்குப் பழைமையான குளம் ஒன்றும், நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களும், பவுத்த ஸ்தூபிகளும் உள்ளன என்று தெரிகின்றது.
• இட ஒதுக்கீடு / பிராமண எதிர்ப்பு / வாசகர்களின் 18 கடிதங்கள்
இட ஒதுக்கீடு / பிராமண எதிர்ப்பு / வாசகர்களின் 18 கடிதங்கள்
• இட ஒதுக்கீடு þ பிராமண எதிர்ப்பு கட்டுரைக்கு எதிர்வினைஅரசுப் பணிகள் முற்பட்ட வகுப்பினரால் நிரம்பினþ பிராமணர்கள் இதில் அதிகம் இடம் பெற்றனர் என்பதே சரி. இந்த முற்பட்ட வகுப்பினருக்கிடையே நடந்த அதிகாரப் பகிர்வு அடிதடியின் விளைவு, பிராமண எதிர்ப்பாக உருவெடுத்து, ஜஸ்டிஸ் கட்சியாகப் பரிணமித்தது.
• இட ஒதுக்கீடு: பிராமண எதிர்ப்பும் தமிழகமும்
அடுத்த கட்டுரையில் நான் பிராமணரல்லாத முற்பட்ட சமூகங்கள், 'கிரீமி லேயர்' போன்ற விஷயங்களைத் தொட இருந்தேன் என்றாலும், முதல் கட்டுரையில் பிராமணர்களை மட்டுமே முன்னிறுத்தி இப்பிரச்சினையை அணுகியுள்ளது தவறுதான்.
• இடஒதுக்கீடு: நேசகுமார் கட்டுரைக்கு எதிர்வினைகள்உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நேசகுமாரின் கட்டுரைக்கு எதிர்வினைகள் பல வந்துள்ளன. ஒரு எதிர்வினையைத் தவிர பிறவற்றை எழுதியவரின் பெயர் இல்லாமல் வெளியிடுகிறோம்.
• இட ஒதுக்கீடு þ சில சிந்தனைகள் இண்டெல்ýல் மடிக்கணினியில் உலக விஷயங்களை இறக்குமதி செய்து படிக்கும், வீடு வந்தால் மற்ற கவலைகள் எதுவுமில்லாமல் படிக்கும், பரிட்சை சமயத்தில் தமக்கென பாதி உழைக்கும் தந்தையின் உழைப்பையும் பயன்படுத்திக்கொள்ளும் சஷாங்கையும், தன்னுடைய பிரச்சினைகளையும் மீறிப் படிக்கும் உலகநாதனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியுமா?
• மூனிக் þ திரைப்பார்வைதிரையரங்கில் ஏதோ ஓர் ஆங்கிலப் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்தப் படத்தின் டிரெய்லர் ஓடியது. ஸ்பீல்பர்க் படம் என்பதால் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
• ஸ்டாýன் ஃபேக்டரும் தடுமாறும் திமுகவும்
தேர்தல் நெருங்கிவிட்டது. தினம் ஒரு புது தகவல் வந்து கொண்டும், வருகிற தகவல்களால் நிலைமை நாளுக்கு நாள் மாறிக்கொண்டும் உள்ளது.
• தமிழகத் தேர்தல் : உருளும் பகடை உருளத் தொடங்கிவிட்டது, தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் தத்தமது படை,பரிவாரங்களுடன் குருúக்ஷத்திரக் கூடாரங்களில் வந்தமர்ந்து சங்கொýயை எதிர்நோக்கியுள்ளன.
• ஒரு கெஷாவின் நினைவலைகள் - சிலப்பதிகாரக் காதையினூடே
சமீபத்தில் பார்த்த, மறக்க முடியாத படம் இது. ஜப்பானிய கெஷாக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் புகழ் பெற்ற நாவýன்(ஙங்ம்ர்ண்ழ்ள் ர்ச் ஹ எங்ண்ள்ட்ஹ க்ஷஹ் அழ்ற்ட்ன்ழ் எர்ப்க்ங்ய்) படமாக்கம் இது.
• ரங் தே பஸந்தி þ திரை விமர்சனம்
கதை தெளிவானது þ கல்லூரியில் லூட்டியடிக்கும் ஒரு நண்பர்கள் குழுவை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ள படம் இது. டிஜேயாக வரும் அமீர்கான் தான் இந்த லூட்டிக் குழுவின் அறிவிக்கப் படாத தலைவன். பியர் குடித்துவிட்டு முகட்டில் வளைந்து நின்று யார் அதிக ஸ்டெடி என்ற போட்டியில் அறிமுகமாகின்றார் அமீர்கான்.
• தில்ýப் பயணம்: உலக புத்தக விழா, சவுதி அரசரின் வருகை, மெட்ரோ ரயில்,......உலக புத்தக விழா திறப்பு விழாவன்று காலையிலேயே சென்று விட்டோம் நானும் நன்பர் அறிவழகனும். வர விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தும் நண்பரின் வற்புறுத்தல் காரணமாக ஆக்ரா பயணத்தை ரத்து செய்து விட்டு 27ஆம் தேதி பிரகதி மைதான் சென்றுவிட்டோம்.
• பெங்களூரின் இந்திய அறிவியல்கழகத்தின் மீதான தாக்குதலும் பெருகும் இஸ்லாமியத்தீவிரவாதமும்
டிசம்பர் 28ஆம் தேதி, புது வருட மூடில் அனைவரும் இருந்த சமயம், திடீரென்று உறவினர் ஒருவரிடமிருந்து தொலைபேசி வந்தது. பெங்களூரில் இந்திய அறிவியல் கழகத்தைத் (ஐய்க்ண்ஹய் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் - ஐஐநஸ்ரீ) தீவிரவாதிகள் தாக்கிவிட்டார்கள் என்று. உடனடியாக குடும்பத்தார்கள் அனைவருக்கும், ஐ.ஐ.எஸ்.சிக்கு அருகே இருக்கும் இராமையா கல்லூரியில் படிக்கும் சொந்தக்காரப் பையனின் நிலை குறித்துக் கவலை ஏற்பட்டது.
• புத்தாண்டுத் தீர்மானங்கள்வாழ்க்கையில் அத்தியாவசியமானவற்றிற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என நினைத்து நினைத்து, அன்றாடம், அவ்வப்போது நாம் அத்தியாவசியம் என்று நினைப்பவை நமது நேரத்தை கொள்ளை கொண்டு விடுவதால், சென்ற வருடத்தைத் திரும்பிப் பார்த்து, இந்த வருடத்தில் இவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டும் என நினைத்துக்கொண்டுள்ளேன்.
• தமிழகத்தின் பெருமழைக்காலமும் சில தேர்தல் கணக்குகளும்
இத்தனை சேதங்கள், துயரங்களுக்கு மத்தியிலும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர். நான் சந்திக்க நேரும் அனைத்து அரசியல்வாதிகளும் இந்தப் பெருமழைக்காலம், தமிழகத்தில் அடுத்து வரப்போகிற சட்டசபைத் தேர்தலை எப்படித் தாக்கும் என்பது குறித்தே கவலையுடன் இருக்கின்றனர்.
• நேசகுமார்: ஒரு சிறு அறிமுகம்
தத்துவம், ஆன்மிகம் தவிர சினிமா, இலக்கியம், கவிதை, சரித்திரம், அறிவியல், பொது நிகழ்வுகள் என வியக்க வைக்கும் விதத்தில் அவரது எழுத்து பல தளங்களில் ஒளி வீசி வருகிறது. தெள்ளத் தெளிவாய் எவருக்கும் அஞ்சாமல் தமது கருத்துகளை நேர்மையாகச் சொல்லும் நேசகுமார், தமிழ்சிஃபியில் தொடர்ந்து எழுத இசைந்துள்ளார். அவருக்கு நமது நல்வரவு.